சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுகான் நகரில் உருவான கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீனா வெளியிட்ட தகவலின்படி வருகின்ற நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளது. மேலும் சீனா நான்கு வித தடுப்பு மருந்துகளை பரிசோதனை செய்து வருகிறது நவம்பர் அல்லது டிசம்பரில் தடுப்பு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என்று சீனத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.