Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடை நடத்த முடியாது என்று கூறியுள்ளனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இதற்கென்று சட்டதிட்டம் வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அனைவரும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அனைத்து சாலையோர கடைகள் நடத்தும் உரிமையாளர்களுக்கும் சிப் பொருத்தப்பட்ட கியூஆர் கோர்டு பொருந்திய அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் இதற்கென்று கூட்டம் அமைத்து சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்தனர். அதில் அந்தந்த வார்டு அலுவலக உறுப்பினர்களே விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வவழங்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி தற்போது வரை 24 ஆயிரத்து 573 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6,567 அட்டைகள் தற்பொழுது உள்ள நிலையில் மீண்டும் முகாம் நடத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை அந்தந்த வார்டில் நடத்தப்படும் முகாமில் கலந்து கொண்டு தற்போது வரை சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டையை முறைப்படி பெறவில்லை என்றால் தற்சமயத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.