தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான ட்வீட்!
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் தனது படையை நிறுத்த ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ரஷ்ய மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் பல உயிர்ச் சேதங்களும் நடைபெற்று விட்டது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் போர் தொடுப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் ரஷ்யா சிறிதும் அதனை கண்டுகொள்ளாமல் போரின் பத்தாவது நாளில் மனிதாபிமானம் என்ற பெயரில் போரை நிறுத்தியது. அதன் பிறகு உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து நாடுகளும் ரஷ்யாவின் ஏற்றுமதி-இறக்குமதிகளை தடை செய்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு புறம் உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்திய மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டுமென்று இந்திய மக்கள் பலர் மத்திய அரசிடமும் ,மாநில அரசிடமும் கோரிக்கை வைத்து வந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்பொழுது உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களை மீட்டு வருகின்றனர். அவ்வாறு இருந்தபோதிலும் இந்தப் போரினால் இரண்டு இந்திய மாணவர்களை இழக்க நேரிட்டது. மேலும் உயிர்சேதம் நடக்காமல் இருக்க மாணவர்களை மீட்பதற்கு முழு முயற்சியையும் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாநில அரசும் மீட்பு பணிக்கு என்று ஒரு நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு,மாணவர்களின் மீட்பு பணிக்காக 3 கோடி வரை செலவு செய்ததாக தெரிவித்தனர். இவ்வாறு தமிழக அரசு மூன்று கோடி செலவு செய்ததை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்பொழுது ஒரு புதிய ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்களை மீட்டுள்ள நிலையில், தமிழக அரசு 3 கோடி செலவு செய்தது என கூறுவது அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டு வந்த செலவுதான் என இவ்வாறு அவர் கூறி கேலியாக கூறி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.