இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை!

0
229
#image_title

இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை!

இந்தியாவில் இயங்கி வரும் மேரியன் பயோடெக் எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை பயன்படுத்தியதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்துள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரும்பல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மேலும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த இரும்பல் மருந்தினை பரிசோதனை செய்தனர் அதில் எத்திலீன கிளைக்கால் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேரியன் பயோடெக் நிறுவனத்தின் ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான ஜெயா ஜெயின், சச்சின் ஜெயின் உள்ளிட்ட இருவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் டோக் 1 மேக்ஸ் இன்னும் இருமல் மருந்தின் மாதிரிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அண்மையில் ஆப்பிரிக்கா நாடன காம்பியாவில் இந்திய தயாரிப்பு இரும்பல் மருந்தால் 70 குழந்தைகள் உயர்தாக கடந்த அக்டோபர் மாதம் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு மருந்துகள் வழங்கும் பொழுது கவனமாக வழங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.