Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காரின் மீது கட்டிவைத்து காதல் செய்த ஜோடி! இப்படியுமா என கழுவி ஊற்றும் மக்கள்!

The couple who fell in love by tying on the car! People who wash and pour like this!

The couple who fell in love by tying on the car! People who wash and pour like this!

காரின் மீது கட்டிவைத்து காதல் செய்த ஜோடி! இப்படியுமா என கழுவி ஊற்றும் மக்கள்!

ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி கோசென்கோ. இவர் ஒரு ஊடக பிரபலம். இவர் தனக்கு சொந்தமான ஒரு யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனக்கென ஒரு தனி பக்கம் வைத்துள்ளார். இவர் தனது காதலியுடன் இணைந்து பல்வேறு விதமான வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது இவருக்கு வழக்கம். அது போல சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து அவர் எடுத்த வீடியோ ஒன்று தற்போது மிக வைரலாகி வருகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு மட்டும் கிட்டத்தட்ட 50 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை Trust Test என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடகத்தின் இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கட்டி வைத்துக்கொண்டு,  இருவரும் தங்கள் கைகளில் விலங்குகளை மாட்டிக் கொண்டு, ரோட்டில் கார் ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதே போல் வேறு ஒரு வெளிநாட்டு ஜோடி ஒன்றும் இதே போல் கை விலங்கிட்டு தன் காதலை சோதிக்க எண்ணி ஒரு வாரம் செய்த சோதனையில், காதலில் தோற்று இதில் என்ன சுதந்திரம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் பின்தொடர்வது போன்ற எண்ணம் தான் மேலோங்குகிறது என்று ஏழு நாட்களில் பிரிந்து விட்டு, தனியாக புகைபடங்களையும், வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ பலரது கவனத்தைப் பெற்றாலும், பலர் இந்த செயலுக்கு பெரும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஒருவர் உண்மையாக சொல்ல வேண்டுமானால், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது. ஆனால் அதை போய் எல்லாரும் அனுபவித்து பார்க்கிறார்கள். இது உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கு நீங்கள் வைத்த முன்மாதிரியா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ அந்த நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக, அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.760  அபராதம் விதித்துள்ளனர். முக்கியமாக அந்நாட்டின் சிறுவர் சிறுமியர்களுக்கு இது ஒரு தவறான செயல் முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version