Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

Order to remove roadside statues! High Court Next Action!

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!

நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் லட்சங்களை தாண்டியே உள்ளது.அந்தவகையில் அப்பொருட்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அவ்வாறு தனது வாகனம் எங்காவது சென்று மோதினால் காருக்கு எந்த சேதாரமும் நடக்காதவாறு காரின் முன் பம்பர் பொருத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பம்பர்கள் பொருத்துவதினால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.அந்தவகையில் பம்பரை பொருத்தினால்  ஏதேனும் விபத்துக்கள் நடைபெற்றால் இரண்டு சக்கர வண்டிகள் அந்த பம்பரினுள் மாட்டிக்கொண்டு இழுத்து சென்று ஓட்டும் நபருக்கு உயிர் சேதங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமின்றி யாரேனும் கார் முன்னிலையில் அடிக்கபட்டால் அதிக வேகத்தில் பம்பர் மேல் படுவதினால் அந்த இடத்திலேயே உயிர் சேதம் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளது.அதுமட்டுமின்றி பம்பர் பொருத்துவதினால் ஏர் பேக் வசதி சில நேரங்களில் செயல்படாமல் போய்விடுகிறது என்றும் கூறுகின்றனர்.இதனால் மக்கள் நலன் கருதி மத்திய அரசு நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர்களை அகற்ற வேண்டும் என்று கூறினர்.ஆனால் அந்த தடையை அகற்றுமாறு பம்பர் தயாரிக்கும் நிறுவனத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதனையடுத்து கார் உள்ளிட்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் பம்பர் பொருத்தினால் கட்டாயம் ரூ.5000 அபராதம் வாங்கப்படும் என திட்டவட்டமாக கூறினர்.

அதனையும் மீறி தற்போது பம்பர் தயாரிக்கும் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.இவ்வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப்பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.அதில் எதிர்மனுதாரர்களுக்கான வக்கீல் கூறியதாவது,பம்பர்களினால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் அடைந்தது என கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை.அதனால் வாகனங்களில் பயணம் செய்யும் மற்றும் இதர சாலைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த வித பாதிப்புக்களும் இல்லை என கூறினார்.அதேபோல 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து பம்பர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதுவரை அதனால் எந்தவித பாதிப்புக்களும் நடைபெறவில்லை என கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி கூறியதாவது,தங்களுக்கு மக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்.அதுமட்டுமின்றி பம்பர் பொருத்திய வாகன ஓட்டிகள் அதி வேகத்திலேயே வண்டிகளை ஓட்டுவர்.மேலும் மத்திய அரசு கூறிய விதிமுறைகளை தடை செய்ய முடியாது என்று கூறினார்.அதுமட்டுமின்றி தற்போதும் சில அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகள் வாகனங்களில் இன்றளவும் பம்பர்கள் பொருத்தப்பட்டிருப்பது வாரத்திற்குரிய விஷியமாக கருதப்படுகிறது என கூறியுள்ளார்.மேலும் மத்திய அரசு பம்பர்களை அகற்ற வேண்டும் என்று கூறியதை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டது.அதனால் மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை கடுமையாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version