அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை!
கோவை அரசு மருத்துவமனையில் தேவைக்கும் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பல மருந்து மாத்திரைகள் காலாவதியாகி உள்ளது. ஏன் இத்தனை மருந்துகளும் காலாவதியானது, எதற்காக இவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என அம்மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமலை ராணியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமின்றி மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்பொழுது காலாவதியாகி நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் போன்றவை ரத்து செய்தனர்.
இது குறித்து மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி, பொறுப்பாளர் முத்துமலை ராணியை எதிராக பல கேள்விகளை எழுப்பினார். கொள்முதல் செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் பொது மக்களுக்கு சரியாக வழங்கப்பட்டு வருகிறதா, அல்லது பல்வேறு மருந்துகளை கொள்முதல் செய்து வேறு மருந்துவமனைக்கு சட்ட விரோதமாக அனுப்பப்படுகின்றதா என்று பல கேள்விகளை எழுப்பினார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு தான் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து நீதிபதி, மருந்து காப்பகம் பொறுப்பாளர் முத்துமாலை ராணியிக்கு வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதிய பலன்களை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் விசாரணைக்கு முத்துமாலை ராணியும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
மேலும் தமிழக அரசிற்கு புதிய நிபந்தனைகளை வைத்து இந்த வழக்கை முடிவுற்றார். அதில், ஆரம்ப சுகாதார நிலையம் என தொடங்கி அரசு மருத்துவமனைகள் வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரித்த நேரத்தில் வேலைக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அங்குள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு பறக்கும் படையை நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த பறக்கும் படையானது தனது கடமையை சரியாக செய்கின்றதா என்பதை ஒரு உயர் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.