மேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன?
மேட்டூரையடுத்த குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன். கடந்த ஆண்டு வீட்டிலிருது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார்த்தி, ஜெகதீஷ், பாலாஜி, பாஸ்கர் ஆகிய நான்கு பேரும் முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளியான கண்ணனை வழிமறித்தனர். பின்னர் அறிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த படுகாயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர் மேலும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாஸ்கரன் என்பவர் உடல்நிலை குறைவால் இறந்து விட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு மேட்டூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்திருந்தது. விசாரணை முடிந்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பை வெளியிட்டார். அதில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி,ஜெகதீஷ்,பாலாஜி ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இத்துடன் அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர் பா.குழந்தைவேல் வாதாடி கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார்.இதனையடுத்து குற்றவாளிகள் மூன்று பேரும் நீதிமன்றத்திலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மேட்டூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் முதன்முறையாக மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது இதுவே முதல் முறையாகும். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.