Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக கோட்டையில் ஏற்பட்ட விரிசல்!! செங்கோட்டையனைத் தொடர்ந்து புறக்கணிப்பில் இறங்கிய தங்கமணி!!

The crack in the AIADMK fortress!! Thangamani went into boycott following Sengottaiyan!!

The crack in the AIADMK fortress!! Thangamani went into boycott following Sengottaiyan!!

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல்கள் இருந்து வருவது வெளிப்படையாக தெரியும் பொழுதிலும் அவற்றை மூடி மறைக்கும் விதமாக நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் முதல்வர் முன்னாள் தலைவர் மற்றும் தற்பொழுது பொது செயலாளர் ஆக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டை எனக்கும் இடையே ஏற்கனவே விரிசல்கள் ஏற்பட்டு அது குறித்த தகவல்கள் வெளிப்படையாக வளம் வந்து கொண்டிருக்க கூடிய தருணத்தில், மீண்டும் ஒரு உட்கட்சி பூசலானது வெளிவர தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே, அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ந்த பொழுது செங்கோட்டையன் அவர்கள் அதனை புறக்கணித்திருந்தார். அதற்கான காரணத்தை கேட்ட பொழுது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்தை வைக்காததால் தான் அதனை புறக்கணித்ததாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவையும் செங்கோட்டையன் அவர்கள் புறக்கணித்து, நலத்திட்ட உதவிகளை செய்வதையே தான் பெரிய விஷயமாக பார்க்கிறேன் என்றும் நினைவு நாளாக இருந்திருந்தால் கட்டாயமாக கலந்து கொண்டிருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இவர்கள் என்ன கூறினாலும் இவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய மனக்கசப்பானது வெளிப்படையாக தோன்றக்கூடிய ஒன்றாகவே உள்ளது.

தற்பொழுது செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவிலிருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான தங்கமணி அவர்கள் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை புறக்கணித்திருப்பது அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு காரணம் வேலுசாமியை அனைத்திற்கும் கலந்த ஆலோசிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மூத்தலைவரான தங்கமணியை மதிப்பதில்லை என்றும் அதிமுக வட்டாரமானது தெரிவிக்கிறது.

மூத்த தலைவருக்கான மரியாதை மற்றும் கலந்து ஆலோசிக்கக்கூடிய விஷயங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான தங்கமணி அவர்கள் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டிருப்பது அதிமுகவில் ஏற்படக்கூடிய பிளவுகளை வெளிப்படையாக காட்டுவதாக அமைந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக செங்கோட்டையன் மற்றும் தங்கமணி இருவரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைகளாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் எடப்பாடிக்கு எதிர்ப்புறத்தில் நிற்பதால் அதிமுகவின் கோட்டையாக இருக்கக்கூடிய கொங்கு மண்டலம் பிளவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version