மருத்துவமனையில் குவியும் கூட்டம்!! சீனாவில் மீண்டும் ஏற்படும் அழிவு!!

0
174
The crowd gathers at the hospital!! Destruction will happen again in China!!

கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில், Human metapneumovirus மற்றும் இன்ஃபுளுவென்சா வைரஸ்கள் பரவுவதாகவும், கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியவர்கள் அதிகரித்துள்ளார்கள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவில், வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருவதாகவும், இந்த பரவலால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தகவல்கள் கூறும் படி, சீன அரசு அவசரகால சட்டம் அமுல்படுத்தியுள்ளதற்குப் பிறகும், இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.கோவிட்-19 தொற்றின் அடுத்த அலை சீனாவில் புதிய பரவலை ஏற்படுத்தியுள்ளது. தகனக் கூடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பல இடங்களில் இந்தத் தகனக் கூடங்கள் நிறைவடைந்துள்ளன. முக்கியமாக, பேஜிங்கில் தகனக்கூடங்கள் அதிகமாக நிரம்பியுள்ளன.

சீன அரசாங்கத்தின் கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ கொள்கை நீக்கப்படுவதன் காரணமாக, மீண்டும் பரவல் அதிகரித்து, சீனாவில் மருத்துவப் பணி மற்றும் தகன பணிகள் சிரமமான நிலைக்கு வந்துள்ளன.

அரசு அதிகாரிகள், கோவிட் இறப்புகளின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடுவதை கடினமாக்கியுள்ளன. இது வேகமாக பரவும் வைரஸ் மற்றும் அதன் புதிய திரிபுகள் ஏற்படுத்தும் ஆபத்தை குறித்து அதிக அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், நிலைமை தீவிரமடையும் எனும் கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. IHME நிறுவனத்தின் கணிப்பின்படி, 2023 இல் உலகளவில் 10 லட்சம் இறப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.