மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

0
129

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரையை சேர்ந்த ஹரி (40) இவர் மனைவி கோமதி (35).இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.மேலும் ஹரி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்துள்ளது.ஏற்கனவே சந்தேக குணம் படைத்த ஹரி தனது மனைவி வேலைக்குச் செல்லவும் மேலும் சந்தேகம் அதிகமானது.இதனால் இருவருக்கிடையே சண்டை வர ஆரம்பித்துள்ளது. இதுமட்டுமின்றி கோமதியை குடித்துவிட்டு போதையில் கண்மூடித்தனமாக அடிக்கவும் ஆரம்பித்துள்ளார் ஹரி.

ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாத கோமதி விருகம்பாக்கத்தில் உள்ள தனது அம்மாவிற்கு போன் செய்து நடந்த பிரச்சனையை அவ்வப்போது கூறுவாராம்.கோமதியின் அம்மா இருவரையும் சமாதானம் செய்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்திருக்கின்றது.

இதுபோன்று ஒருநாள் குழந்தைகள் வெளியே விளையாடிக்கொண்டிருக்க,
கோமதியின் அம்மா வீட்டில் இருக்கும்போதே ஹரி மற்றும் கோமதிக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கின்றது.ஹரியை தட்டிக்கேட்ட மாமியாரை கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போகுமாறு கத்தியுள்ளார்.இதனால் வெளியே வந்து நின்றுகொண்டார் கோமதியின் தாயார்.

இதனைத் தொடர்ந்து ஹரி மற்றும் கோமதிக்கிடையே சண்டை வலுக்கவே,
கோமதியின் தாயார்
விருதம்பாகத்திற்கு சென்று விட்டதாக எண்ணி ஹரி கோமதியை கீழே தள்ளிவிட்டு கோமதியின் கழுத்தைஅறுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அலறல் சத்தம் கேட்டு கோமதியின் தாயார் பதறியடித்து உள்ளே சென்ற பொழுது தனது மகளை கத்தியால் அறுத்துக் கொண்டு இருந்ததைக்கண்டு பதறிப்போய் மகளின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கோமதியின் தாயார்.

ஆனால் ஏற்கனவே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.செய்வதறியாமல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே,கோமதியை அனுமதிருந்த தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கோமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.அதற்குள் கோமதியின் கணவன் ஹரி தானாகவே காவல்துறையினரிடம் சரணடைந்தார்.கோபத்தில் கணவன் செய்த செயலால் அந்த இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.