Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் என்பவர்.இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சண்டையிட்டு,வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வசித்து வந்தார்.கூலி வேலை செய்யும் இவர் இரவு நேரங்களில் சாலையோர கடைகளை உறங்கி வந்துள்ளார்.

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இரவு தனது வேலைகளை முடித்துவிட்டு இருளாபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவில் நன்றாக உறங்க சென்ற மனிதன் காலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரனின் உடலை மீட்டுவிட்டு,
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்பொழுதுதான் 5 மர்ம இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி பின்பு அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்தக் காட்சிகளின் அடிப்படையில் அந்த 5 இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,அந்த ஐந்து இளைஞர்கள்யும் ஒரே இடத்தில் கொத்தாக பிடித்தனர்
காவல்துறையினர்.

பின்பு அந்த இளைஞர்களிடம் விசாரணை செய்தபோது உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.அந்த ஐந்து இளைஞர்கள் பாலாஜி, பொன்ராஜ்,இலங்கேஸ்வரன், லட்சுமணன் என்பவர்கள் என்றும் இவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.மேலும் இந்த ஐந்தில் ஒருவரான பாலாஜி என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் சென்றபோது, சாலையில் படுத்திருந்த முதியவரை எரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.இதை தொடர்ந்து அந்த இளைஞர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவர்களை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் போதைக்கு ரோட்டில் உறங்கி கொண்டிருந்த முதியவர் இரையானது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version