Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொடூரமாக கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவன் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டவே வேலை தேடி டெல்லிக்கு குடி பெயர்ந்தனர். அங்கு கிடைக்கும் கூலி வேலைகளை செய்த அவர்களது குடும்பத்தினர் டெல்லியில் புறநகர் பகுதியில் தங்கினர். ரவீந்திரன் மட்டும் வேலை ஏதும் செய்யாமல் ஊர் சுற்றி வந்ததோடு மட்டுமில்லாமல் போதை பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார்.

போதை பழக்கத்தோடு மட்டுமில்லாமல் தவறான நண்பர்களின் தொடர்பால் ஆபாச படங்களையும் பார்க்கத் தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் ஆபாச படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கினார். அதன் விளைவாக குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கியுள்ளார்.

இதற்காக அவன் டெல்லியில் உள்ள புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் குழந்தைகளை நோட்டமிட்டு அவர்களை ஆசை காட்டி 10 ரூபாய் பணம் மற்றும் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து அவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கழுத்தை நெரித்து கொன்றுள்ளான்.  பின்னர் பிணத்தை யாருக்கும் தெரியாமல் கண்காணாத இடத்தில தூக்கி போட்டுள்ளான்.

ஒரு பகுதியில் ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற பிறகு அந்த இடத்தில இருப்பது இல்லை. வேறு ஒரு இடத்திற்கு குழந்தையை தேடி செல்லும் பழக்கத்தை வைத்துள்ளான். இதற்காக 40 km தூரம் புறநகர் பகுதிக்கு நடந்துச் சென்றே குழந்தைகளை கடத்தியுள்ளான். கடந்த 2014 – ஆம் ஆண்டு 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கழிவுநீர் கால்வாயில் வீசி சென்றுள்ளான்.

அவனது துரதிஷ்டம் அந்த குழந்தை உயிர் பிழைத்து விட்டது. சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த கொலைகாரனைத் தேடத் தொடங்கினர். அதற்காக அவர்கள் அந்த பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் இன்பார்மர்கள் கொடுத்த தகவலின் பேரிலும் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர தேடுதலில் டெல்லி ரோகிணி அருகே சுக்பீர் நகர் பேருந்து நிலையத்தில் குற்றவாளி சிக்கியுள்ளான். அவனிடம் உரிய விசாரணை செய்ததில் 6 வயது குழந்தையை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டான்.  மேலும் 2008 – ஆண்டு முதல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி மற்றும் புறநகர் பகுதியை சுற்றி சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

குழந்தைகள் தன்னை காட்டி கொடுக்காமல் இருக்க பலாத்காரம் செய்ததும் அவர்களை கொல்வதை வழக்கமாக வைத்துள்ளான். அவன் கூறியதைக் கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியை அடைந்தனர். மேலும் அவனால் கொல்லப்பட்ட குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.  திரட்டிய விவரங்களின் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் பிஞ்சு குழந்தைகளை பலாத்காரம் செய்து கொன்ற அவனுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

 

Exit mobile version