வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

0
246
The cruelty inflicted by the society on the woman who came to ask for work! What will this country say to him who is currently pregnant!

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

மராட்டிய மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் முடிந்த 6 மாதங்களில், போலீசார் உட்பட நான்கு 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி கூறும்போது இவ்வாறு கூறினார். பீட் மாவட்டத்தில் திருமணமான சிறுமி ஒருவர் கடந்த 8 மாதங்களில் மட்டும் 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறுமி ஒரு புகார் மனுவை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

சிறுமியின் புகாரை தொடர்ந்து குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு என வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமி தனது தாயை இழந்து விட்டார்.

8 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து திருமணம் செய்து வைத்தார். சிறுமி அவரது கணவர் மற்றும் மாமியார் தாக்கப்பட்டதன் காரணமாகவும், அவரை மிகவும் மோசமாக நடத்தியதன் காரணமாகவும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தந்தையை சந்தித்தார்.

அப்போது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக சிறுமி பீட் மாவட்டத்திலுள்ள அம்பாஜோகையில் உள்ள பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டியுள்ளார் என்றும் அதனை தொடர்ந்து பல இடங்களில் வேலை தேடி சென்றபோது பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் அங்கு பாலியல் வன்முறைக்கும் ஆழாக தொடங்கினார்.

ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அந்த சிறுமி குழந்தைகள் நல குழுவிற்கு அளித்த அறிக்கையில் நான் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், பல முறை அம்பாஜோகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக ஒரு போலீஸ்காரர் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் கூறியுள்ளார்.