குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

0
181
The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை பார்த்த பஞ்சவர்ணம் அது காணாமல் போன தனது மகன் தான் என கூறினார். எனவே அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மகேஸ்வரனின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

எனவே யாரோ ஒரு மர்ம நபர் அவரை அரிவாளால் வெட்டி, அதன் பிறகு பிணத்தை தூக்கி கடலில் வீசி இருக்க வேண்டும் என போலீசார் கருதினார்கள். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மகேஸ்வரன் காணாமல் போன அன்று இரவு அவரது நண்பர் கார்த்திக் என்பவருடன் வெளியில் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவரைத் தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர் தான் அந்த கொலையாளி என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து அந்த நபரை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர். அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தன்று நானும் எனது நண்பனும் மது அருந்திக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாக நான் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டேன். அதன் பிறகு பிணத்தை பட்டினப்பாக்கம் கடல் முகத் துவாரத்தில் வீசி விட்டதாகவும், அவர் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னைப்பற்றி தவறாக பேசியதன் காரணமாக மது போதையின் பாதிப்பினால் தனக்கு ஏற்பட்ட வெறியின் காரணமாகவும் அவரை படுகொலை செய்து விட்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்த்திக் மீது அபிராமபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.