Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார்.

அதனையடுத்து புவனாவும் குழந்தையை பராமரிப்பு வேலை தான் என நம்பி கடந்த பிப்ரவரி மாதம் குவைத் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில தினங்களிலேயே தன் கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஒரு பெரிய குடும்பத்திற்கே வேலை செய்வதாகவும் அங்கு தினம் 20 மணி நேரம் அவரை வேலை வாங்குவதாகவும் அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு வேலை வாங்கி கொடுமை செய்வதாகவும் கூறியுள்ளார்.

சாப்பிட உணவு கூட சரியாக தராமல் அடித்து கொடுமை செய்வதாக கதறி அழுதுள்ளார்.இதனை அடித்து அவருடைய கணவர் ஜேம்ஸ் பால் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை கேட்டுள்ளார்.எம்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் சிஇஒ கணியா பாபு மூலம் தூதரகத்தை தொடர்பு கொண்டனர்.அப்போது தூதரக அதிகாரிகள் புவனா தப்பி வந்து தூதகரத்தை சேர்ந்தால் மட்டும் போதும் எனவும் கூறியுள்ளனர். இது குறித்து அவருடைய கணவர் புவனாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் நான் தங்கி வேலை செய்வது அந்நாட்டின் காவல் அதிகாரி ஒருவரின் வீடு எனவும் அங்கிருந்து தப்பி வர முயற்சி செய்தால் அவர் தன் மீது திருட்டு பழி சுமத்தி திருட்டு வழக்கு பதிவு செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவரது மகள் தன் தாயை எப்படியாவது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு எனது தாயை காப்பாற்றி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version