கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை!
தற்போது கொரோனா தடுப்பூசி அனைத்து மாநிலங்களிலும் செலுத்திக் கொண்டு உள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் குறைந்த அளவே உள்ளது. அதற்கு காரணம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என அனைத்து அரசுகளும் முடிவு செய்து கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே போல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் ஒன்று உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தும் அளிக்கப்படுகிறது.
எனவே நேற்று முன்தினம் ராஜ் குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த ஒரு இடத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை பார்த்த அவர், தடுப்பூசி செலுத்துவதற்கான வரிசை என தவறுதலாக நினைத்து அங்கே நின்று கொண்டிருந்தார்.
அவருக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசியும் செலுத்தியுள்ளார். அதன் பிறகுதான் அவருக்கு தெரியவந்தது அந்த வரிசை வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்த இருந்தவர்கள் என்று. அதன் காரணமாக அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த தகவல் மேலதிகாரிகளுக்கு தெரிய வரவே கவனக்குறைவாக செயல்பட்டதால் செவிலியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரையும் கண்காணித்து வருகின்றனர்.