Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் பிரதமர் பிரகடனப்படுத்திய குற்றவாளியா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  பிரகடனப்படுத்திய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் வேண்டுமென்றே சட்டத்தின் செயல்பாட்டில் இருந்து தன்னை தவிர்ப்பது, தப்பி ஓடுவது, மறைப்பது என்று நடந்து கொண்டிருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது.

அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்” என கூறினார். மேலும் நவாஸ் ஷெரீப் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். அத்துடன் அவரது அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் குறித்த பட்டியலை 10 நாளில் கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறும் ஆணை பிறப்பித்தார்.

Exit mobile version