ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை!

0
119
The culprit who escaped by a word error! Sentencing given by the High Court!

ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளியூரில் வேலை செய்வதால் அந்த குழந்தைகளை பக்கத்து வீட்டில் விளையாட விட்ட தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று வந்திருக்கிறார்.

வீட்டுக்கு திரும்பி வந்த போது குழந்தையின் உடலில் மாற்றங்களை தாய் கவனித்துள்ளார். மேலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதன் காரணமாக தாய் குழந்தையை பரிசோதித்த போது அதன் பெண் உறுப்பில் இருந்து ஏதோ திரவம் கசிந்து இருக்கிறது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் பிரகாஷ் மீது போலீசில் புகார் செய்தார் குழந்தையின் தாய். திருவாரூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த புகார் குறித்த விசாரணைக்கு வந்தது போக்சோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புகார் அளிப்பதில் தாமதம் மருத்துவ ஆதாரங்கள் முழுமையாக இல்லை மற்றும் குழந்தையின் உடலில் செம்மண் இருப்பதை கொண்டு. இப்படி எப்படி வழக்கு தொடர முடியும், என்று பிரகாஷின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். அதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு அந்த நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பி வேல்முருகன் நேற்று விசாரித்த பின்னர் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து வேல்முருகன் தன் தீர்ப்பின் மூலம், போலீசில் புகார் அளிப்பதில் தாமதம் மற்றும் வழக்கில் குறிப்பிடப்படும் வார்த்தைகள் உள்ள தவறுகள் ஆகிய காரணங்களால் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் போலீஸ் விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தில் குழந்தையின் உடலில் விந்து இருந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையான செமன் என்பதை குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தவர், செமன் என்ற வார்த்தைக்கு பதில் செம்மண் என்று தவறுதலாக செய்துள்ளார். இதனை குறித்து குழந்தை விளையாடும்போது செம்மண் உடம்பில் இருப்பதாக கூறி அவரது வழக்கறிஞர் குற்றவாளியை விடுவித்துள்ளார்.

ஆங்கில வார்த்தை தவறுதலாக தட்டச்சு செய்து அதன் காரணமாக குற்றவாளிக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இந்த குற்றவாளி பிரகாஷுக்கு தற்போது ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படியும், தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.