மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்தது! பீதியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 அன்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோய்தொற்றால் பல உயிரிழப்பு ஏற்ப்படட்து. மேலும் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இந்த தொற்றுநோயின் கோரத்தாண்டவத்தால் உயிரிழப்பு பல லட்சத்தை எட்டியது. இதற்காக 24 மார்ச் அன்று 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா பரவல் மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 42 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது ஒரு மாத காலத்துக்கு பாரிஸ் மற்றும் அதனையொட்டியுள்ள 16 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் கூறியுள்ளார். மேலும் உரிய காரணம் இல்லாமல் எல்லைகளுக்கிடையே பயணம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு உரிய சான்றிதழ்களைப் பெற்றபிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் இரவு நேர ஊரடங்கு மாலை 6 மணிக்குப் பதிலாக இரவு 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்சி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகள் எவ்வித தடைகளுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தொடர்ந்து செயல்படும் என தகவல் வெளிவந்துள்ளது. பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை போடும் பணிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது தடுப்பு மருந்து போடும் பணி மேற்கொள்ளலாம் என அறிவித்தார்.