அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

0
214
The daughter died the moment the mother died! Awful for the granddaughter in no time!

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் வசித்து வருபவர் தான் இந்திரா.

இவருக்கு ஓர் மகள் உள்ளார்.அம்மகளுக்கு திருமணம் செய்தும் வைத்துள்ளார்.அவரது மகள் தற்பொழுது விடுமுறையை கழிக்க தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.அவரது மகளுக்கு மூன்ற வயதில் ஓர் குழந்தை உள்ளது.இன்று காலை இந்திரா தனது வாசலில் முன்,துணி துவைத்துள்ளர்.துணி துவைத்து முடித்ததும் வீட்டின் முன் உள்ள இரும்பு கம்பியில் துணிகளை காய வைக்க முயன்றுள்ளார்.அவ்வாறு துணிகளை காய வைக்கும் போது அந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.அது அறியாது அந்த இரும்பு கம்பியில் துணிகளை காய வைத்ததால் மின்சாரம் பாயிந்து சம்பவ இடத்திலேயே இந்திரா உயிரிழந்தார்.

இந்திரா மின்சாரம் பாயிந்து கீழே விழுந்து கிடந்துள்ளார்.அவர் கீழே விழுந்து கிடந்ததை கடந்து அவரது மகள் பதற்றம் அடைந்துள்ளார்.அம்மாவை தூக்க முயன்ற போது அவர் மீது உள்ள மின்சாரம் இவர் மீதும் பாய்ந்தது.அப்போது இவர் கையில் வைத்திருந்த குழந்தை மீதும் மின்சாரம் பாயிந்த்து.அம்மா மின்சாரம் பாயிந்து இறந்த ஓர் நொடிகளிலேயே மகள் மற்றும் அவரது பேத்தி அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.