Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு போட்டோவில் மூலம் பட வாய்ப்புகளை குவித்த நடிகையின் மகள்! மம்மியை டம்மி ஆக்கி மகளை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் 90’sகளின் கனவு கன்னிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா 2002ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழிகளில் எக்கச்சக்கமான படங்களில்  ஹீரோயினாக நடித்து வந்தார்.

நடிகை ரோஜா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய புன்னகை மட்டுமே. இதற்காகவே அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அவருடைய பேச்சாலும் திறமையாலும் அழகாலும் தமிழ் மக்களின்  வரவேற்பை பெற்றார் .மேலும் 90’sகளின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

இவர் ஆந்திராவில் முக்கியமான கட்சியான ஒய்.எஸ்.ஆர் எனும் காங்கிரஸ் கட்சியில் 1999ஆம்  ஆண்டில்  இணைந்தார். நடிப்பு மற்றும் அரசியல் என்று இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து ரொம்ப பிசியா வாழ்ந்துட்டு இருந்த ரோஜாவை பிரபல இயக்குனர் செல்வமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள்  உள்ளனர்.

இவர் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் அரசியலில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் என்றே கூறலாம். தற்போது இவர் ஆந்திராவில் நகர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக மாநில மகளிர் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொரோனா காலத்திலும் மக்களுக்கு சில நிவாரண நிதிகளை வழங்கி வருகிறார்.

இப்படி முழுநேர அரசியல்வாதியாக மாறிய ரோஜா அண்மையில் அவரது மகள் மல்லிகாவின் 17 வது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடினார். அத்தோடு இல்லாமல் மகளுடைய போட்டோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் கொஞ்ச நாளாகவே அப்லோடு செய்து லைக்குகளையும் பெற்றுக் கொண்டு வருகிறார். 

சின்ன வயசுல ரோஜா இருந்ததை காட்டிலும் பெரிய அழகி என்று கூறுமளவிற்கு நெடுநெடுவென வளர்ந்து மல்லிகா அழகில் நம்மை மெய்மறக்க வைக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்கள் ரோஜாவின்  மகளை பலவாறு புகழ்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை கண்டு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ரோஜாவின் மகளை படத்தில் கதாநாயகியாக மாற்ற விரும்புவதாக தகவல்கள் வெளியாகின்றன.

Exit mobile version