Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

#image_title

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டு இறுதி மறக்க முடியாத ஒன்றாக தடம் பதித்துவிட்டு சென்று விட்டது.

கடந்த அக்டோபர் மாதம் பிள்ளையார் சுழி போட்ட வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் என்னவோ சலிப்பாகத் தான் பெய்தது. ஆனால் நாட்கள் நகர நகர அதன் பத்ரகாளி ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. இதில் மிக்ஜாம் புயல் இடையில் வந்து வட தமிழக்தை புரட்டி போட்ட நிலையில் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தை ஆட்டி படைத்து விட்டது. வரலாறு காணாத மழையை கண்டு தென் மாவட்ட மக்கள் கலங்கி போய் நின்றனர்.

இப்படி புயல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வட மற்றும் தென் மாவட்டங்களை சுழட்டி போட்ட நிலையில் ஒருபுறம் வடகிழக்கு பருவமழை தனது பங்கிற்கு எவ்வளவு மழையை கொட்டி தீர்க்க முடியுமோ கொட்டி தீர்த்து விட்டது.

இருந்த போதிலும் பருவமழை காலம் இன்னும் முடிவடையாமல் இருக்கின்றது. குளிர்காலத்தில் மழையை அவ்வளவாக பார்க்க முடியாது. ஆனால் தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்ட போதிலும் தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்த பருவமழை எப்பொழுது முடிவுக்கு வரும் என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதிக்கு மேல் பருவமழை முற்றிலும் குறைந்து விடும் என்றும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழையின் அளவு அதிகம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Exit mobile version