Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தல்  நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்  திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து டிசம்பர் 14 அன்று காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏ வாக இருக்கும் போது   ஈ.வெ.ரா திருமகன் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ் ஏற்பட்டு இருக்கிறது.  இது குறித்து காங்கிரஸ் கட்சி பிரதிநிதி செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையம் சட்டப்படி ஈரோடு இடைத்தேர்தல் நடத்தப்படும், தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடத்த இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அது வரை தேர்தல் ஆணையம் காத்து இருக்காது.

காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு துக்கத்தில் இருந்து மீளவில்லை.  காங்கிரஸ் கட்சி  ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியுடன் சேர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

Exit mobile version