கடந்த 2024 ஆம் ஆண்டு முதலே 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் (அதிகபட்சமாக கூட்ட நெரிசல்) நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இவ்வளவு கவனக் குறைவு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. சமீபத்தில் புதுடில்லியில் ரயில்வே ட்ராக் மாறி வந்த ரயிலால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுக்கும் முனைப்போடு, தற்சமயம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்துகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் குறித்து வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கூட்டம் அதிகமாக இருக்கும் 60 ரயில்வே நிலையங்களில் ஓய்வு அறை அதிகமாக செயல்படுத்தப்படும். மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மக்களின் ஆலோசனை வரவேற்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி விபத்தில் பிளாட்பார்ம் மாறி ரயில் வந்தது எந்த ஒரு சதியும் கிடையாது. விசாரணை குழு இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிகமாக கூட்டம் உள்ள ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.