Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது!

The decision taken by the preacher due to morphing photos! This is what happened between the two!

The decision taken by the preacher due to morphing photos! This is what happened between the two!

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது!

இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பாக அகில பாரத அஹரா பரிஷத்தின் தலைவராக இருப்பவர் நரேந்திர கிரி. உலகப் புகழ்பெற்ற சாமியாராக இவர் திகழ்கிறார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியுள்ளார். அவரது அறையை திறந்து பார்த்த சீடர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில் அந்த அறையில் சாமியார் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.  அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சாமியார் நரேந்திர கிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாமியாரின் அறையில் அவர் எழுதியதாக கருதப்படும் கடிதம் ஒன்றும் கிடைத்தது. எனவே அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதில் தனது சீடர்கள் மூன்று பேரால் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதப்பட்டிருந்தது.

ஆனாலும் போலீசார் கடிதத்தின் உண்மைத் தன்மையை குறித்து விசாரித்து வந்தனர். பின்னர் அந்த கடிதத்தில் இருந்த தகவல்களையும் வெளியிட்டனர். இதில் என் தற்கொலைக்கு சீடர்களான ஆனந்த் கிரி, நித்யா பிரசாத் திவாரி, மற்றும் சந்தீப் திவாரி ஆகியோர் தான் காரணம் என்று பெயர்களையும் கூறியிருந்தார்.

அவர்கள் எனது புகைப்படத்தை ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வைரலாக திட்டமிட்டிருந்தார்கள் என்று ஒரு தகவல் எனக்கு கிடைத்தது. அதன் காரணமாக நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நான் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்த ஒருவன். அது கெட்டு அவப் பெயறுடன் வாழ நான் விரும்பவில்லை.

எனவே கடந்த 13ஆம் தேதி இந்த முடிவுக்கு வந்தேன். ஆனாலும் தைரியம் வராத காரணத்தினால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் எழுதி இருந்த மூன்று சீடர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் உத்தரப்பிரதேச போலீசார் அமைத்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ஆனந்த் கிரி, நல்ல உயரம், நீண்ட முடி மற்றும் பிரெஞ்சு தாடி ஆகியவற்றையெல்லாம் கொண்டு வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர். இவர் ராஜஸ்தானில் இருபத்தி ஒன்றாம் தேதி ஆகஸ்ட் 1980 இல் பிறந்தார். இவர் தனது பத்தாவது வயதில் நரேந்திர கிரியுடன் அறிமுகமாகி அவரால் ஹரித்வாருக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் இவர் தனது பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல ஆண்டுகள் உத்தரகாண்டில் வாழ்ந்து அதன் பின்னர் பிரயாக்ராஜுக்கு வந்ததாகவும் ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது பாஸ்போர்ட்டில் கூட தாயின் பெயருக்கு பதிலாக பெண் தெய்வமான பார்வதி தேவியின் பெயரையும், தந்தையின் பெயருக்கு பதிலாக குருவின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனாலும் அவர் பிரிட்டன் மற்றும் கனடா உட்பட உலகின் பல நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளதாக கூறியிருந்தார். யோக குருவாக தனக்கென ஒரு முத்திரை பதித்த இவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பொதுவாழ்க்கையில் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது பேஸ்புக் கணக்கை பார்த்தாலே போதும்.

அவருக்கு கிடைத்த இந்த அந்தஸ்து மற்றும் கௌரவம் ஆகியவற்றில் பிரயாக்ராஜுக்கு ஒரு பெரும்பங்கு உண்டு. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் புகைபடங்களில் எல்லாம் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய மந்திரிகள் வரையிலான தலைவர்கள் பலர் அவருக்கு முன்னால் கைகளைக் கூப்பியபடி காணப்படுவார்கள்.

ஆனந்த் கிரி வெளிநாடுகளில் யோகா கற்றுத்தரும், வெளிநாட்டு பயணத்தின் போது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை நெருக்கமாக அறிந்தவர்கள் சாமியார் நரேந்திர கிரிக்கும், ஆனந்த் கிரிக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் ஒரு நிலம் தொடர்பான விவகாரத்தில் குருவும் சீடரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சாமியார் நரேந்திர கிரி மடத்தின் நிலங்களை தனிப்பட்ட முறையில் விற்றதாகவும், ஆனந்த் கிரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த வழக்கில் அவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கு ஒரு தனி கடிதம் எழுதி விசாரணை ஏற்படுத்தவும் கோரியிருந்தார். ஆனால் சிறிது காலத்திலேயே தனது குருவான நரேந்திர கிரியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version