சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2015-16 காலக்கட்டத்தில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது, போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 4.81 கோடி மதிப்புடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததது.
இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கடந்த மே 30-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கோரி தாக்கல் செய்த சத்யேந்திர ஜெயினின் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்தார்.
இன்று கூறிய தீர்ப்பில், மனுதாரர் சத்யேந்திர ஜெயின் செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் சாட்சிகளை கலைக்க முற்படக் கூடும் என்பதாலும், தற்போதைய நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது.
இதுபோல இவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைபவ் ஜெயின், அன்குஷ் ஜெயின் ஆகியோரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.