பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

0
354
#image_title

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.

மறியலில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை தமிழக அரசு எந்த பேச்சு வார்த்தையும் நடத்த முன் வராமல் காவல்துறையினரை கொண்டு அப்புறப்படுத்தியுள்ளது.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், ” பார்வை மாற்றத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அவர்கள் போராடி வருகின்றனர் . இடைப்பட்ட காலத்தில் அவர்களின் ஐந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளை முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்” என வலியுறுத்தியுள்ளார்.