Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகளிர் உரிமைத் தொகை பெறுபவரா  நீங்கள்!!  உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ் நியூஸ்!!

The Deputy Chief Minister has ordered to provide mandatory entitlement amount to those who have been left out of the Women's Entitlement Scheme.

The Deputy Chief Minister has ordered to provide mandatory entitlement amount to those who have been left out of the Women's Entitlement Scheme.

DMK:மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கட்டாயம் உரிமைத் தொகையை வழங்க துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சட்டக் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு 825 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும்  இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை மட்டுமல்லாமல் மகளிர் மேம்பாட்டிற்கு அனைத்து வகையான திட்டங்களை திமுக அரசு எடுத்து வருகிறது.  மகளிர் வீட்டில் முடங்கி இருக்காமல்  இருக்க கல்விக்காகவும் வேலைக்காகவும் மகளிர் மீது இருந்த ஆண் ஆதிக்க பிம்மத்தை உடைத்தெறிந்தார் பெரியார்.

அதே வழியில் இந்தியாவில் முதன் முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்தவர் கலைஞர். இதன் மூலம் மகளிர் வாழ்க்கை மேம்பட்டு உள்ளது. பெண்கள் குறிந்த விட்டி விகித்தில் இக்குழுக்களில் கடன் பெற முடியும். தமிழகத்திற்கு முதலமைச்சராக  ஸ்டாலின் பதிவி ஏற்ற போது முதலாவதாக  5 திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மற்றும் உரிமை தொகை திட்டம் ஆகியவை இருந்தது.

கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே  16 லட்சம் மகளிர் மாதம் மாதம் 1000 ரூபாய்  பெற்று பயனடைகிறார்கள். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் விடு பட்டு இருக்கலாம், தகுதியானவர்களுக்கு மீண்டும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Exit mobile version