viduthalai 2: விடுதலை 2 திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதல் 2 திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நக்சல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் திரைக்கதை அமையப் பெற்று இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” நாவலை தழுவிய திரைக்கதை ஆகும். விடுதலை முதல் பாகத்தில் 1980 ஆண்டுகளில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தில் வளங்களை சுரண்டும் முதலாளித்துவம் அதை ஆதரிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராடும் மக்கள் படைக்கும் இடையிலான மோதல்களை காட்சியாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், மக்கள் படைத் தலைவனை (வாத்தியார் ) பிடிப்பதற்காக போலீசார் அப்பாவி மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை காட்சிப்படுத்தி இருந்தார். மக்கள் படைத் தலைவன் (வாத்தியார் ) பிடிப்பதற்காக போலீஸ் வேலைக்கு புதிதாக சேரும் குணசேகரன் காவலாளி (சூரி) வாத்தியாரை பற்றி தெரிந்து கொள்வதே இரண்டாம் பாகம் ஆகும்.
விடுதலை இரண்டாம் பாகத்தில் அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதத்தை கையில் ஏந்தி போராட்டம் மக்கள் படை குழுவை முழுமையாக நியாயப்படுத்தும் விதமாக திரைக் கதை நகரும் விதமாக படம் இருக்கிறது என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்களை பாதிக்கும் திட்டங்களை முடக்குவதற்கு ஆயுதம் ஏந்திய போராட்டம் தான் சரியான வழியாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.