Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆச்சியை கண்டு அசந்து போய் நின்ற இயக்குனர்!! இப்படி ஒரு திறமையா!!

The director was shocked to see Achi!! Such a talent!!

The director was shocked to see Achi!! Such a talent!!

சினிமா துறையில் 1500 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய ஒரே நடிகை என்ற பெருமை மனோரமா அவர்களையே சாரும். இவருடைய ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களில் நடிக்கும் பொழுது இவருடன் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நடித்திருக்கின்றனர்.

1965 ஆம் ஆண்டு வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமா துறையில் நடித்த அசத்தியவர் நம்முடைய ஆட்சி. 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரையே சாரும். இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட நடிகை ஆட்சி குறித்து 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் அவர்கள் பகிர்ந்த தகவலை இங்கு காண்போம்.

இயக்குனர் சிம்புதேவன் மனோரமா பற்றி பகிர்ந்த தகவல் :-

23ம் புலிகேசி திரைப்படத்தில் மனோரமா அவர்களுடைய காட்சியினை எடுப்பதற்கு முன்பாக 15 பக்கம் எழுதப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து வருமாறு மனோரமா அவர்களிடம் இயக்குனர் கொடுத்ததாகவும், மனோரமா அதனை வாங்கி இரண்டு முறை படித்துவிட்டு அந்த 15 பக்க வசனத்தையும் எக்ஸ்பிரஷனோடு கூறியதை பார்த்து தான் அசந்து போய் நின்றதாகவும் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன் அவர்கள்.

மேலும், இது எப்படி உங்களால் முடிந்தது என கேட்ட பொழுது, 1000 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளேன் இது கூட செய்ய முடியவில்லை என்றால் எப்படிப்பா என சிரித்துக் கொண்டே கூறியதாகவும் பகிர்ந்துள்ளார். இப்படிப்பட்ட திறமை மிக்க புகழ்மிக்க நடிகை மனோரமா அவர்கள் நம்முடைய தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது மிகப்பெரிய வரம்.

Exit mobile version