புதுவசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் இயக்குனராக மக்கள் மனதில் பதிந்தவர் விக்ரமன். தன்னுடைய திரைப்படங்களில் அன்பை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியதில் கைதேர்ந்தவராக விளங்கிய சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இவரே.
இவர் இயக்கத்தில் வெளியான சூரிய வம்சம் மற்றும் வானத்தைப்போல திரைப்படங்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன. தன்னுடைய படங்களில் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மட்டுமே காட்டக் கூடியதில் கைதேர்ந்தவர் இயக்குனர் விக்ரமன். இவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அழைப்பு குறித்தும் நேரில் சந்தித்த பொழுது நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தும் வெளிப்படையாக பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் விக்ரமன் ஜெயலலிதா அவர்களை சந்தித்த பொழுது நடந்ததை தெரிவித்திருப்பதாவது :-
ஒரு நாள் சசிகலா அவர்களிடமிருந்து இயக்குனர் விக்ரமனுக்கு செல்போனில் அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய சசிகலா அவர்கள் உங்களுடைய “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” திரைப்படமானது ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு மிகவும் பிடித்த படம் என்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற தேர்தலுக்கு நீங்கள் ஒரு பிரச்சார படத்தை இயக்கி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்த நாள் போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் விக்ரமன் அவர்கள் நான் எப்பொழுதும் நேர்மறை விஷயங்களை மட்டுமே படமாக எடுக்கக் கூடியவன் அதனால் உங்களுடைய சாதனைகளை மட்டுமே பிரச்சார படமாக எடுத்துக் கொடுப்பேன் என்றும் அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை குறித்த எந்த காட்சிகளையும் பிரச்சார படத்தில் நான் எடுக்க மாட்டேன் என கரராக தெரிவித்திருக்கிறார். இதனை ஜெயலலிதா அம்மா அவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் அதன் பின் 2016 ஆம் ஆண்டிற்கான பிரச்சார படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கி கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.