1992 ஆம் ஆண்டு எம் எஸ் மாது இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் தெய்வ வாக்கு. உண்மையில் கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படமானது முழுமையாக இயக்குனர் மாது அவர்களால் இயக்கப்படவில்லை. அதற்கு மாறாக திரைப்படத்தின் கடைசி 28 நாட்கள் இத்திரைப்படத்தின் கதை நாயகனான கார்த்திக் அவர்களால் இயக்கப்பட்டதாகும்.
இது குறித்து தெய்வ வாக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி சிவா ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
இத்திரைப்படத்தின் கதையினை முதலில் கார்த்திக் அவர்களிடம் கூறும் பொழுது கதை பிடிக்கவில்லை என கூறவே அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட மீண்டும் அவரிடம் கதையைக் கொண்டு செல்லும் பொழுது அவர் இயக்குனர் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதன்பின் ஒரு வழியாக கார்த்திக்கிடம் கதையை கூறி தெய்வ வாக்கு திரைப்படத்தில் நடிக்க அழைக்கும் பொழுது இயக்குனர் மாது அவர்கள் மதுவிற்கு அடிமையாகி விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்த சமயத்தில் இயக்குனர் மாது அவர்கள் செய்த சம்பவம் ஒன்றை தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதாவது, ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாது அவர்கள் மனோரமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ” ஆட்சி இன்று உங்களுக்கு சூட் இருக்கிறது .முதலில் உங்களை வைத்து தான் சாட் எடுக்க உள்ளேன். தயவுசெய்து நீங்கள் சென்று விடக்கூடாது ” எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு மனோரமா மிகவும் பொறுமையாக எனக்கு பிளைட்டுக்கு நேரமாகிவிட்டது மது தயவுசெய்து விடுங்கள் என கூறி இருக்கிறார். அவருடைய பொறுமைக்கு காரணம், ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கிழக்கு வாசல் திரைப்படத்தில் பணியாற்றியிருப்பதாலும் மேலும் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு இருப்பதாலும் மனோரமா மிகவும் பொறுமையாக தன்னை விடும்படியும் தனக்கு பிளைட்டுக்கு நேரமாக இருப்பதையும் கூறி இருக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தெய்வ வாக்கு திரைப்படத்தில் மனோரமா அவர்களுக்கு வேலையில்லை. அவர் வேறொரு திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்திருக்கிறார். தன்னுடைய கதையில் மனோரமா இல்லை என்பதை கூட உணர முடியாத நிலையில் மாது அவர்கள் மது அருந்து இருப்பதால் இதனை கார்த்திக்கிடம் கொண்டு சென்றதாகவும் கார்த்திக் உடனே அவரையும் பிளைட் ஏறி செல்ல சொல்லுங்கள் நானே திரைப்படத்தை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியதாகவும் தயாரிப்பாளர் டி. சிவா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.