Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

#image_title

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை முன்னிட்டு இன்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வாங்கினார்.

அப்போது கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ப்பது வழக்கம் அதில் பொது மக்களிடம் வாங்கப்படும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய அந்த அந்த துறை அதிகாரிகளை அழைத்து விளக்கமும் கேட்கப்படுவது வழக்கம் இந்நிலையில் அவ்வாறு இரண்டாம் நிலை அதிகாரிகள் ஒருவரே தொடர்ந்து வராமல் மாறி மாறி வருவதால் ஏற்கனவே வாங்கிய மனுக்களை பற்றி தங்களுக்கு தெரியாது என தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

இதனிடயை‌ இன்று அரியலூர் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இரண்டாம் நிலை அதிகாரி வராமல் அலுவலக பணியாளர்களை அனுப்பி வைத்திருந்தனர்.

இதனால் உரிய அதிகாரிகள் இருந்தால் மட்டுமே மனுக்கள் மீது சரியான பதில் அளிக்க முடியும் மனுவிற்க்கும் தீர்வு காணமுடியும் என்பதால் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறியதால் அலுவலக பணியாளர்கள் குறைதீர் முகாமில் இருந்து வெளியேற உத்தரவிட்டார்.

Exit mobile version