Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

#image_title

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.

தேவையான பொருட்கள்:-

*பச்சை கற்பூரம் 25 கிராம்
*ஏலக்காய் 10 கிராம்
*வெண் கடுகு 250 கிராம்
*மருதாணி விதை 250 கிராம்
*வேப்பிலை பொடி 50 கிராம்
*வில்வ இலை பொடி 50 கிராம்
*ஜவ்வாது 50 கிராம்

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த சாம்பிராணி பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும்.

இதை வீட்டு பூஜையில் வைத்து தூபம் போட்டு வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதுமட்டும் இன்றி இதில் வெண் கடுகு சேர்த்திருப்பதால் அவை உங்கள் வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டியை அடியோடு நீக்க உதவும்.

பச்சை கற்பூரம், ஏலக்காய், ஜவ்வாது உள்ளிட்ட பொருட்கள் பணத்தை வசியம் செய்யும் ஆற்றல் கொண்டது. மருதாணி விதை, வில்வ இலை, வேப்பிலை வீட்டில் லட்சுமி கடாச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.

Exit mobile version