Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் எம்பியான ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜோதிமணியிடம் கலந்தாலோசிக்காமல் சின்னசாமியுடன் மட்டும் கலந்தாலோசித்து வார்டுகளை ஒதுக்கியுள்ளனர்.இது குறித்து திமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய  ஜோதிமணியை வெளியே போய் பேசுங்கள் என விரட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வெளியே வந்த ஜோதிமணி அவர்களை கடுமையாக விமர்சித்தவாறே சென்றார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Exit mobile version