Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

#image_title

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் முன்னேற்ப்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன ஏற்கனே தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டு வருகின்றனர்.

வருகின்ற 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில் திமுக சார்பில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

எனவே திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் பொதுசெயலாளர் துரைமுருகன் ஆகியோர் முதற்கட்டமாக நேர்காணல் நடத்தி வருகின்றனர்,இந்த நேர்காணலில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றிய பணி குறித்தும் , புதிய வேட்பாளர்கள் தகுதி மற்றும் கட்சி பணி குறித்த கேள்விகளும் கேட்கப்படவுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் முதற்கட்டமாக கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர்,கடலூர் வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தவுள்ளனர்.

Exit mobile version