அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதேவேளையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து சிவில் வழக்கு மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் இருந்த போதே அதிமுக பொது செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து பொது செயலாளர் தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே சி டி பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இரு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுசெயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதை தொடர்ந்து அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுய்க்கொண்டார்.
இந்நிலையில், பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்ட ஆவணங்களை அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்த்ல் அதிகாரி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய ரெக்கார்ட் படி ஒருங்கிணைப்பாளர் , இனை ஒருங்கிணைப்பாளர் என்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.