Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!!

#image_title

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டெல்லி மாநிலத்தில் ஹம்ரித் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹம்ரித் நகரில் முன்னா என்ற ஆட்டோ டிரைவர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர் முன்னா முடிவெடுத்தார்.

இதையடுத்து ஹம்ரித் நகரின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் முன்னாவால் போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளி வர முடியவில்லை. இதையடுத்து அருகில் இருந்த பயணிகள் நடக்கும் நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளியே வந்தார்.

இந்த சம்பவத்தை அருகில் நடந்து சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அந்த வீடியோ வைரலாக பரவத் தொடங்கியது. இதையடுத்து இந்த வீடியோ காவல் துறையினரின் கண்களில் பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் முன்னாவை கைது செய்த காவல் துறையினர் முன்னாவின் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

 

Exit mobile version