பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

0
167
The echo of the spread of swine flu! Disinfectant spraying work intensity!

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி,சிறுத்தை,கடமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகின்றது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வாரங்களாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றது.அதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக- கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள 96 சோதனை சாவடிகளில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.அதுமட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்து வளர்ப்புக்காகவோ, இறைச்சிக்காகவோ பன்றி கொண்டு வருவதற்கும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பன்றி பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகின்றது.அதனையடுத்து பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் வெளியில் இருந்து வருபவர்களை  பண்ணைக்குள் அனுமதிக்க கூடாது. மேலும் பன்றிகளுக்கு சுகாதாரமான உணவுகளை கொடுக்க வேண்டும்.