Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை அடித்தள நிலைமைக்கு கொண்டுவந்து அவர்களின்  வாழ்வாதாரத்தை அடியோடு நாசம் செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல நடிகர்கள் ,இயக்குனரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தினவிழா அன்று விவசாயிகள் டிராக்டர் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தால் பெருமளவு கலவரம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து 13 நாட்களிலேயே நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.அந்நிலையிலும் அனைத்து மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அன்று போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில்  திமுக மட்டும்தான் தனது குரலை எழுப்பியது.

அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி.அன்று விவசாயிகள், புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீயில் போட்டு எரித்து ஹோலி கொண்டாடினர்.மத்திய அரசிடம் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.அதனையடுத்து நேற்று ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்தை நடத்தினர்.இதில் நாடு முழுவதும் கடைகள் மூடப்பட்டும், பேருந்துகள் இயக்கப்படுவது தடை செய்யவும் பட்டது.சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சில மாநிலங்களில் காரோன தொற்று குறைந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் திறந்து இருப்பதால் மீண்டும் விடுப்பு அளிப்பது மாணவர்களின் படிப்பைக் கெடுக்கும் என்பதால் வழக்கம்போல் அனைத்தும் செயல்பட்டது.

அந்தவகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 500 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேருந்து மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட எம்பி,எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மாநில செயலாளர் என்.கே நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட கோபாலகிருஷ்ணன் ,முத்தரசன் ,திருமாவளவன் உட்பட 250 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.இந்தப் போராட்டமானது காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.சில தினங்களுக்கு முன் திமுக தனது கூட்டணி கட்சியினருடன் பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்தும் ,வேளாண் சட்டங்களை எதிர்த்தும் கருப்பு கோடி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version