ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது இறைவன் குடுத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.தாய்மை அடையும் பெண்கள் பத்து மாதத்திற்கு மட்டுமல்லாமல் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கும் கவனமாக இருக்க வேண்டும். அதில் முதல் மூன்று மாதம் நாம் உண்ணும் உணவிலிருந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அந்த மூன்று மாதத்தில் நாம் தெரியாமல் செய்யும் தவறு கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். அதே போன்று முதல் மூன்று மாதத்தில் கர்ப்பமாக உள்ள பெண்கள் சுடுநீரில் குளிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்குஉடலின் சூட்டை அதிகப்படுத்தும் உணவையும் மற்றும் சட்டென்று உடலின் சூட்டை குறைக்கும் உணவையும் தரமாட்டார்கள். ஏனெனில் அது கருச்சிதைவை ஏற்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளது என்பதால் இது போன்ற உணவுகளை தவிர்ப்பர். அதேபோன்று சுடு தண்ணீரில் குடிப்பதாலும் சில விளைவுகளை படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது.
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதத்தில் சுடுநீரில் குளித்தால் கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.மேலும் அமெரிக்க கர்ப்பிணி பெண்களுக்கான சங்கம் கூறுவது என்னவென்றால் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் -க்கு மேலே போகக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.
அதற்கென்று சுடுதண்ணியில் குளிக்கவே கூடாது என்பதல்ல. நீங்கள் சூடான நீரில் குளிக்க நினைத்தால் நீரின் சூட்டை லேசாக வைப்பது நல்லது.சுடுநீரில் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக்கூடாது.முதல் மூன்று மாதங்களில் கருவியில் குழந்தைகள் பெரிதும் வளர்ச்சி அடைந்து இருக்காது.
கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் வளர்ச்சி முழுமையடையாத நிலையில் சூடான நீரில் குளிக்கும் போது கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். எனவே முதல் மூன்று மாதங்கள் உடல் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் -க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சுடுநீர் குளியல் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது. அந்த அளவிற்கு சூடாகக் குளித்தால் உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வெப்பநிலையால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும் வாய்ப்புள்ளது.
எனவேதான் கர்ப்பிணி பெண்கள் உண்ணும் உணவில் மட்டுமன்றி செய்யும் செயலிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.