நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா?

0
295
#image_title

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், பாஜக தலைமையிலான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், அதிமுக தேமுதிக கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் தனித்து நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அண்மையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது, அதில் இருபது ஆண்கள் இருபது பெண்கள் என சமமான அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் வழக்கம் போல் கரும்பு விவசாயிகள் சின்னத்தில் தேர்தலை சந்திக்க இருந்த நிலையில், அந்த சின்னத்தை பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்படாத கட்சி மேலும் முன்னுரிமை காரணமாகவே பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு கரும்பு விவசாயிகள் சின்னத்தை ஒதுக்கியதாக விளக்கப்பட்டது.

எனவே தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புதிய சின்னத்தை கோரியிருந்த நிலையில் ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சி ‘மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்’ என வாக்கு சேகரித்து வந்தது குறிப்பிடதக்கது.