நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

0
192
The Election Commission published the date of the parliamentary elections!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகின்ற ஜுன் மாதம் பதினாறாம் தேதி முடிவடைகிறது.எனவே 2024 ஆம் ஆண்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது சின்னத்தை பெறுவது, வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரம் மேற்க்கொள்வது என இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.

இந்த நிலையில் தான் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் புதிதாக தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் அமர்வு நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது.

நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல்19 தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் ஏழுக் கட்டங்களாக நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்  நடைபெறும் என தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் விளவங்காடு இடைத்தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி மார்ச் 27 வரை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது,  மார்ச் 28 வேட்புமனுவை பரிசீலனை செய்யவும், மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறவும் கடைசி நாளாக அறிவித்துள்ளது.