israel: காசாவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யகு அவ்வளவுதான் ஹமாஸ் சச்காப்தம் முடிந்துவிட்டது இனி அவர்களால் வரமுடியாது என கூறியுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களின் ஹமாஸ் தலைவர்களின் இறப்புக்கு பின் போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் தற்போது காசா சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர்களும் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து தொடர்ந்து நடத்தப்பட்ட போரில் ஹமாஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். மேலும் இதில் 45,000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யகு நடைபெற்று பெற்று போர் காலங்களில் காசாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அப்போது பேட்டியளித்த அவர், ஹமாசின் சகாப்தம் முடிந்தது. இனி அவர்க எந்த அதிகாரத்திற்கும் வரவே முடியாது. மேலும் இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக கட்டாயம் மீட்க படுவார்கள்.
இந்த பணய கைதிகளை மீட்டு கொடுப்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அந்த சந்திப்பில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக இந்த போரில் தலையிட்டு கூட போரை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. இதெல்லாம் எதையும் கருத்தில் கொள்ளாமல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யகு காசாவுக்கு சென்று பேட்டி அளித்திருப்பது பாலஸ்தீனத்தின் மக்களுக்கு இடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.