‘பேஸ்புக்’ தலைமை நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடி அபராதம்!! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!!

0
84

Meta:பேஸ்புக்கின் தலைமை நிறுவனம் மெட்டா நிறுவனத்திற்கு 7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து இருக்கிறது ஐரோப்பிய ஆணையம்.

மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ என்ற சமூக வலைதள நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது பேஸ்புக் நிறுவனம் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பேஸ்புக் மட்டுமல்லாமல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனத்திற்கு 7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து இருக்கிறது ஐரோப்பிய ஆணையம். அதாவது மெட்டா நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகிறது. என்ற குற்றச்சாட்டுகள் முதன் முதலில் வைத்தது பிரேசில் நாடு. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனம் மார்க்கெட் பிளேஸ் என்ற தொழிலை செய்து வருகிறது.

இந்த மார்க்கெட் பிளேஸ் முறையை பேஸ்புக் செயலி பயன்படுத்தும் பயனாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மார்கெட்பிளேஸ் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் மெட்டா நிறுவனம் மீது புகார்கள் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒருங்கு முறை ஆணையத்தில் 27 உறுப்பு நாடுகள் கொண்ட அதிகாரிகள் குழு மெட்டா நிறுவனத்தின் மீது உள்ள புகார் விசாரணை நடத்தியது.

இதன் முடிவில் 80 கோடி யூரோ இந்திய மதிப்பு படி 7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து இருக்கிறது ஐரோப்பிய ஆணையம். இந்த முடிவு புகார் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை மேல்முறையீடு செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த 7 ஆயிரம் கோடி அபராதம் மெட்டா நிறுவனம் கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதன் கீழ் இயங்கி வரும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்  நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.