12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவிர்த்து வந்தனர். அத்தொடரில் இருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு மாறி மாறி மூன்று ஆண்டுகளாக மக்கள் பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாகியும் சரிவர நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் இருந்தது. ஒன்று அல்லது இரண்டு மாதகாலம் நேரடி வகுப்புகள் நடத்தப் பட்டால் அடுத்த மாதம் தொற்று பாதிப்பு அதிகரித்து மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடும் நிலைக்கு வருகிறோம்.இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டுகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்காமல் போனது. இந்த ஆண்டும் மூன்றாம் அலை அதிகளவு தீவிரம் காட்டி வந்தது. இம்முறையும் பொதுத்தேர்வு நடைபெறாது என்று பலர் கூறிவந்தனர்.
அவ்வாறு கூறி வந்த நிலையில் தடுப்பூசி போதுமானளவு வரவழைக்கப்பட்டு மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிறார்களுக்கும் தடுப்பூசி தற்பொழுது செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் தொற்று பாதிப்புக்கள் பெருமளவில் காணப்படாது. எனவே இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறிவந்தார். அவர் கூறி வந்தது போலவே இரு தினங்களுக்கு முன்பு பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதில் மே மாதம் முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது.
வரி இருக்கையில் அடுத்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அன்பில் மகேஷ் தற்பொழுது கூறியுள்ளார். இவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அதில் கூறியது, தொற்று காரணமாக தற்போது வரை பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்க வில்லை. பொதுத் தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் வர இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மார்ச் இறுதிக்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என கூறினார். மேலும் மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருப்பதால் அதற்கு முன்பே ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.