Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

 

 

விழுப்புரம்,ஸ்டாலின் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அவர்கள் வசிப்பிடம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.புகழேந்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆகியோர் வந்திருந்தனர்.

 

ஆனால் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பு தான் வந்த வாகனத்தில் இருந்து காலணி அணியாமல் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஆய்வினை மேலோட்டமாக மேற்கொண்டிருந்த கோட்டாட்சியரை ஸ்டாலின் நகர் குடியிருப்புவாசிகள் தங்கள் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வருமாறு கோரிக்கை விடுத்தனர்.இதனை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக அவரும் அப்பகுதிக்கு செல்ல முற்பட்டார்,ஆனால் தான் காலணி அணியாமல் இருப்பதை அறிந்த அவர் தன் உதவியாளர் ஒருவரை அழைத்து தன் காலணியை எடுத்துவருமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

உதவியாளரும் கோட்டாட்சியரின் காலணியை எடுத்து வர அவர் வந்த வாகனத்தை நோக்கி முற்பட்டார்.இந்நிலையில் செய்தியாளர்கள் இதனை கவனித்து கொண்டிருப்பதை அறிந்த கோட்டாட்சியர் தனது பாவனை மூலம் உதவியாளருக்கு மீடியா ஆட்கள் பார்கிறார்கள் என்று உணர்த்தினார்.இதனை புரிந்து கொண்ட உதவியாளரும் கோட்டாட்சியரின் வாகனத்திற்கு பின்புறம் சென்று முகத்தை காட்டாமல் கைகளை மட்டும் நீட்டி காலணியை வைத்தார்.

 

இந்நிலையில் ஆய்வு மேற்கொள்ள வந்த கோட்டாட்சியர் அவரது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version