விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!!

0
355
The executives who bargained without Vijay's knowledge.. Vijay took action in extreme anger..!!

விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்பதால், இந்த தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஆனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் இதை மீறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தவெக கட்சி நிர்வாகிகள் சிலர் தென் மற்றும் வட மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்களாம்.

அதுமட்டுமல்ல இதற்காக பிற கட்சிகளிடம் இருந்து பெரிய தொகையை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது நடிகர் விஜய் காதுக்கு சென்றுள்ளதாம். இதனால் கடுப்பான விஜய் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை மாவட்ட நிர்வாகி ஒருவர் இதுபோன்ற விஷயத்தில் சிக்கி அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி 69 படத்தை முடித்த பின்னரே முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். இப்படி உள்ள சூழலில் தவெக நிர்வாகிகளின் இந்த செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். எனவே இந்த புகாரை விசாரித்து அதில் சம்பந்தப்பட்ட கருப்பு ஆடுகளை கட்சியை விட்டு நீக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.