Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு பத்து விதமான உருவங்களில் வரலாம்..!!

நாம் நமது குலதெய்வத்தை மறந்தாலும், நமது குலதெய்வம் நம்மை மறக்காது. நமக்கு தேவையான ஆசீர்வாதத்தையும், அருளையும் என்றும் வழங்கிக் கொண்டே இருக்கும். அந்த குலதெய்வம் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற தேவையான சக்தியையும், அருளையும் வழங்கும். மேலும் அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற அந்த குல தெய்வமே பத்து விதமான உருவங்களில் நம்மிடம் வரலாம்.

குலதெய்வம் நமது வீட்டிற்கு வருகிறது அல்லது குலதெய்வத்தின் சக்தியும், அருளும் நமது வீட்டில் நிறைந்திருக்கிறது என்றால் அந்த குலதெய்வத்தின் அம்சமாக நமது வீட்டிற்கு ஒரு குழந்தை வரும். நமது வீட்டு குழந்தையாக இருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டு குழந்தையாக இருக்கலாம் அது நமது வீட்டினை தேடி வரும்.

செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் குறி சொல்பவர்கள் எதர்ச்சியாக நமது வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் குல தெய்வத்தின் அருளும், ஆசியும் நமது வீட்டில் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
மாடு, பசு, கன்று, காகம், நாகம் இது போன்ற உயிரினங்கள் குலதெய்வத்தின் சக்தியைப் பெற்ற உயிரினம் ஆகும். காகம் நமது வீட்டிற்கு வந்தால் முன்னோர்களின் ஆசி கிடைத்ததாக அர்த்தம். பாம்பினை அடிக்கடி கண்டால் குலதெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேண்டுதலை வைத்து நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பசு மாடு என்பது மகாலட்சுமி அம்சமாக கூறப்படுகிறது.

தான் பெற்ற அனைத்து செல்வத்தையும், சிறப்புகளையும் துறந்த ஒரு நபர் அதாவது அவர் பார்ப்பதற்கு எதுவும் மற்றவர் போல் இருப்பார். அவர்கள் நமது வீட்டிற்கு வந்து உணவு கேட்கும் பொழுது அந்த குல தெய்வமே நமது வீட்டிற்கு வந்ததாக அர்த்தம்.

அனைத்தையும் தெரிந்த, முற்றும் துறந்த சித்தர்கள் நமது வீட்டிற்கு வருவது குலதெய்வமே நமது வீட்டிற்கு வந்ததாக அர்த்தம். நீங்கள் ஆசைப்பட்ட பொன்னும் பொருளும் வாங்குகிறீர்கள் என்றாலும், பணமும் புகழும் வந்து சேருகிறது என்றாலும் குலதெய்வத்தின் அருள் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

நமது கனவில் ஒரு சுமங்கலி, வயதானவர், ஒரு குழந்தை, வெள்ளை நிற பசு, வெள்ளை நிறக்குதிரை, வெள்ளை நிற தாமரை ஆகியவை வந்தால் குலதெய்வத்தின் அருளும், மகாலட்சுமியின் அருளும் நமது வீட்டில் நிலைத்திருப்பதாக அர்த்தம். நமது வீட்டிற்கு வெளியே தெய்வீக அம்சம் கொண்ட வேப்பமரம், வில்வமரம், துளசி இது போன்ற செடிகள் வருகிறது என்றால் குல தெய்வத்தின் அருள் நமது குடும்பத்திற்கு இருப்பதாக அர்த்தம்.

நமது வீடுகளில் கோவில் பிரசாதமான மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, உண்ணக்கூடிய பிரசாதம் இது போன்ற மங்களப் பொருட்கள் நமது வீடு தேடி வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

Exit mobile version